பெங்களூரு: வீட்டிலேயே கஞ்சா செடி அறுவடை... முகநூல் வீடியோவால் சிக்கிய தம்பதி!

பெங்களூரு: பால்கனியில் தாங்கள் வளர்த்துவந்த அலங்கார செடிகள் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்துள்ளது ஒரு தம்பதி. அதில் ஒரு கஞ்சா செடி இருந்ததை கண்ட பயணர்கள், இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, அந்த தம்பதி கைதாகி உள்ளது.
வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: முகநூல் பதிவால் கைதான பெங்களூரு ஜோடி
வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: முகநூல் பதிவால் கைதான பெங்களூரு ஜோடிAI Model Image | புதிய தலைமுறை
Published on

பெங்களூருவில் ஒரு தம்பதி பால்கனியில் தாங்கள் வளர்த்துவந்த அலங்கார செடிகள் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்துள்ளனர். அதில் ஒரு கஞ்சா செடி இருந்ததை முகநூல் பயணர்கள், இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தப்புகாரின் கீழ் சம்பந்தப்பட்ட தம்பதியான சகர் குருங் (37) மற்றும் ஊர்மிளா குமார் (38) கைது செய்யப்பட்டுள்ளனர்.

AI Image

சம்பவத்தின்படி பெங்களூருவை சேர்ந்த சகர் குருங் (37) மற்றும் ஊர்மிளா குமார் (38) என்ற தம்பதி, வெகுநாட்களாகவே பால்கனியில் பல அலங்கார செடிகளை வளர்த்து வந்துள்ளனர். அதனை அழகாக புகைப்படம் எடுத்து, முகநூலில் பகிர்ந்து வந்துள்ளார் ஊர்மிளா. அப்படித்தான் சம்பவ தினத்தன்றும் பால்கனியின் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார் ஊர்மிளா. அதைக்கண்ட ஒரு முகநூல் பயணர், அந்த செடிகளுக்கிடையே மறைந்திருந்த கஞ்சா செடியை கண்டுபிடித்துள்ளார். உடனடியாக அதுபற்றி காவல்துறைக்கு தகவலும் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையும் விசாரணையும் தொடங்கியுள்ளது.

வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: முகநூல் பதிவால் கைதான பெங்களூரு ஜோடி
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு | அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல்

இடைப்பட்ட நேரத்தில் ஊர்மிளாவின் உறவினர் ஒருவர், இதுபற்றி அவருக்கு அலர்ட் கொடுக்கவே... ஊர்மிளா செடியை தொட்டியிருந்து எடுத்து, குப்பைத்தொட்டியில் வீடியுள்ளார். இருந்தபோதிலும் கஞ்சா செடியின் சில இலைகள், அந்த தொட்டியில் அப்படியே இருந்துள்ளன. அதையே ஆதாரமாக வைத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில், தாங்கள் கஞ்சா வளர்த்து வந்ததை அந்த தம்பதி ஒப்புக்கொண்டுள்ளது.

AI Image

தொடர்ந்து அவர்களிடமிருந்து 54 கிராம் வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொபைல் மூலம் வேறு யாருக்கும் கஞ்சா விநியோகம் செய்துள்ளனரா என்பதுபற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதலில் முகநூல் பதிவை அவர்கள் மறுத்தபோதிலும், அக்டோபர் 18 அவர்கள் வீடியோ போட்டது காவல்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது. NDPS Act-ன் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. இருப்பினும் காவல்நிலைய பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: முகநூல் பதிவால் கைதான பெங்களூரு ஜோடி
சென்னை முதல் நாகை வரை.. ஓரிரு இடங்களில் அதீத கனமழைக்கும் வாய்ப்பு.. என்ன சொல்கிறார் வானிலை ஆய்வாளர்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com