மேற்கு வங்க தேர்தலில் கடைசிகட்டமாக நடைபெறும் 8 ஆம் கட்டத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவுக்கென 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசிக் கட்டத் தேர்தலில் வாக்களிக்க 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல்களில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் தொகுதிகளில் 11 தொகுதிகள் ரெட் அலர்ட் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 35 தொகுதிகளில் களம் காணும் 283 வேட்பாளர்களில் 64 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி, கிரிமினல் வழக்குகளை பின்னணியாக கொண்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ரெட் அலர்ட் தொகுதியாக கருதப்படும்.