சென்னை மைதானத்தின் பிட்ச் மோசமானது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் கடுமையாக சாடியுள்ளார்.
14 ஆவது ஐபிஎல் சீசன் போட்டி மும்பை வான்கடே மற்றும் சென்னையில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் நடைபெறுகின்றன. இதில் சென்னை மைதானத்தின் பிட்ச் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. அதாவது சென்னை மைதானத்தின் பிட்சில் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை என்றும் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் வீரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நடப்பு சீசனில் காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே வெளியேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் பென் ஸ்டோக்ஸ், சென்னை பிட்ச் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "நடப்பு ஐபிஎல்லில் பிட்ச் இது மேல் மோசமாக போகாது என நான் நம்புகிறேன். 160 அல்லது 170 குறைந்தபட்ச ஸ்கோராக எடுக்கப்பட வேண்டிய மைதானத்தில் 130 அல்லது 140 ரன்களே எடுக்க முடிகிறது. இந்த பிட்ச் சாம்பலுக்கு நிகரானது" என தெரிவித்துள்ளார்.