ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா பங்கேற்காததால் உக்ரைன் வீரர்கள் கோபமடைந்து தங்களை பிணைக்கைதிகளை போல நடத்தியதாக இந்திய மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. இது உக்ரைன் வீரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறும் இந்திய மாணவர்கள், போலந்து உடனான எல்லை பகுதியில் தாங்கள் பிணைக் கைதிகள் போல நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.
கடுமையான குளிரில் உணவு , குடிநீர், தங்குமிடம் வழங்காமல் அலைகழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தாங்கள் மிக மோசமாக நடத்தப்பட்டதாகவும், எல்லையை கடக்கவிடாமல் தடுக்கப்பட்டதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர். உக்ரைன் மக்களும் தங்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.