சிகிச்சை அளிக்க யாரும் முன்வராததால் மருத்துவமனை வாசலில் பிச்சைக்காரர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
மும்பையில் உள்ள கல்யாண் அருகில் இருக்கிறது டிட்வாலா. இங்குள்ள ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுத்துக்கொண்டி ருந்தவர் சந்துமாமா (65). தினமும் இவருக்குப் பிச்சைப்போட்டு வேலைக்குச் செல்பவர், கணேஷ் (36). கடந்த வெள்ளிக் கிழமை காலையில் ரயில்வே ஸ்டேஷனில் அவரை காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார். அருகில் இருக்கும் ஒரு ரூபாய் கிளினிக் அருகே அவர் உட்கார்ந்திருந்தார். அங்கு சென்ற கணேஷ் அவருக்கு வழக்கம் போல டிபனும் காசும் கொடுத்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். மாலையில் வந்து பார்த்தபோது அவர் சுயநினைவிழந்த நிலையில் அதே இடத்தில் பரிதாபமாகக் கிடந்துள்ளார். மருத்துவமனைப் பூட்டியிருந்தது.
இதையடுத்து கணேஷ், ரயில்வே போலீசாருக்கு ஃபோன் செய்தார். அவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுபற்றி கணேஷ் கூறும்போது, ‘அந்த பிச்சைக்காரர் யாரென்று தெரியாது. ஆனால், தினமும் அவருக்கு பிச்சைப் போடு வேன். வெள்ளிக்கிழமை பார்த்தபோது, அவர் உடல் நலமில்லாமல் இருப்பதுபோல் தெரிந்தது. அதனால்தான் அவர் கிளினிக் கிற்கு சென்றுள்ளார். ஆனால், அந்த ஒரு ரூபாய் கிளினிக்கில் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிச்சைக்காரர் என்பதா ல் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன். மருத்துவமனை கட்டணத்துக்காக, அவர் கையில் 30 ரூபா யை வைத்துள்ளார். இது வருத்தமான விஷயம்’ என்றார்.
ஒரு ருபாய் கிளினிக் டாக்டர் ஹரிசங்கர் திவாரி கூறும்போது, ’அந்தப் பிச்சைக்காரர் எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார் என்பது எங்களுக்கு எப்படி தெரியும்?’ என்றார்.
திட்வாலா போலீசார் அதிகாரி வித்யானந்த் ஜாதவ் கூறும்போது, ’கிளினிக்கில் இருந்த ஒருவர் கூட இவரது உடல்நிலையை பரிசோதிக்காதது வருத்தமளிக்கிறது. அவருக்கு கொஞ்சம் பார்வை குறைபாடும் இருந்துள்ளது. ஸ்டேஷனுக்கு ஏராளமா னோர் வந்துபோகும் இடத்தில் இவருக்கு உதவ வேண்டும் என்று ஒருவருக்கு கூட தோன்றாதது வருத்தமளிக்கிறது’ என்றார்.