டெல்லியில் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்து வருகின்றனர்.
ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் 68 வது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றுது. விழாவில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றி வைத்து அணிவகுப்பைப் பார்வையிடுகிறார். விழாவில் துணை குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், சிறப்புப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் முகமது பின் சயது அல் நஹ்யான் பங்கேற்கிறார். உக்ரைன் நாட்டின் முதலாவது துணைப் பிரதமர் பொறுப்பேற்றுள்ள ஸ்டீபன் குபியும் இதற்காக வந்திருக்கிறார்.
இதையடுத்து குடியரசு தினவிழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.