குடியிருப்பு கட்டட திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்த பணிகள் ராமலிங்கம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அப்போது, எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, எம்.எல்.ஏ சோமசேகர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர் குற்றச்சாட்டு கூறினார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற நவம்பர் 2-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி லோக் ஆயுக்தா காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் எடியூரப்பா அவரது மகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.