நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிபோடும் ஒலிம்பிக் வீரர்கள் - சுவாரஸ்ய பின்னணி..!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிபோடும் ஒலிம்பிக் வீரர்கள் - சுவாரஸ்ய பின்னணி..!
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிபோடும் ஒலிம்பிக் வீரர்கள் - சுவாரஸ்ய பின்னணி..!
Published on

ராஜஸ்தானில் ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் இருவர் களம் காணுகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்பூர் கிராமப்புற மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களாக ராஜ்யவர்தன் சிங் ராவுதர் (49) மற்றும் கிருஷ்ண பூணியா (36) ஆகியோர் மோதுகின்றனர். ராஜ்யவர்தன் சிங் தற்போது பாஜகவில் நிர்வாகியாகவும், மத்திய அமைச்சரைவையிலும் இடம்பெற்றுள்ளார். 

இவர் கடந்த 2014ஆம் தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜோஸியை தோற்கடித்தார். இந்நிலையில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து போட்டியிடும் கிருஷ்ண பூணியா காங்கிரஸ் சார்பில் களமிறங்கியுள்ளார். இவர் ஏற்கனவே எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர்கள் இருவருக்கு ஒரு ஒற்றுமை ஒலிம்பிக் வீரர்கள் என்பதுதான். ராஜ்யவர்தன் சிங் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த அதென்ஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். 2002 மற்றும் 2006ல் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். இதுதவிர 25 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். துப்பாக்கிச் சுடும் துறையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு அர்ச்சுனா விருது வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண பூணியா காமன்வெல்த் போட்டியில் வட்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றவர். இந்தப் பதக்கத்தை கடந்த 2010ஆம் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இவர் வென்றார். அதுமட்டுமின்றி மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதற்காக இவருக்கு கடந்த 2011ஆம் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கு இருக்கும் சுவாரஸ்ய ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஒரே ஆண்டில் (2013) அரசியலுக்குள் நுழைந்தனர். இதனால் அரசியலில் இருவருமே ஒரே அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com