கர்நாடகவின் புதிய முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை - பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு

கர்நாடகவின் புதிய முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை - பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு
கர்நாடகவின் புதிய முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை - பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு
Published on

கர்நாடக மாநிலத்தில் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். பெங்களூருவில் நடந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார், இந்த கூட்டம் பாஜக மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடந்தது.

கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மைக்கு வயது 61, இவரின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை 1988 - 89 ஆம் ஆண்டில் கர்நாடக மாநில முதல்வராக இருந்தவர். ஜனதா தள கட்சியை சேர்ந்த பசவராஜ் பொம்மை 2008 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

புதிய முதல்வராக கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சரான பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் 40-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை, லிங்காயத்து பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் அம்மாநில பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.கர்நாடகாவின் முதல்வராக இருந்த எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com