தெலுங்கு செய்தி சேனல்கள் தரவரிசையில் மோசடி? - ஐநியூஸ் புகார்

தெலுங்கு செய்தி சேனல்கள் தரவரிசையில் மோசடி? - ஐநியூஸ் புகார்
தெலுங்கு செய்தி சேனல்கள் தரவரிசையில் மோசடி? - ஐநியூஸ் புகார்
Published on

தெலுங்கு செய்தி சேனல்களின் தரவரிசை புள்ளிவிவரங்களை BARC நீண்ட காலமாக மாற்றி வெளியிட்டு வந்ததாக முன்னணி தெலுங்கு செய்தி நிறுவனமான ஐநியூஸ் குற்றம்சாட்டியுள்ளது.

BARC மோசடி குறித்த சர்ச்சையையடுத்து, அதன் தடயவியல் தணிக்கை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள, BARC அமைப்புக்குள் குறிப்பிட்ட காலத்துக்குள் பரிமாறிக் கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக ஐநியூஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, தெலுங்கு செய்தி சேனல்களின் தரவரிசை வெளியிட்டதில் நீண்ட காலமாகவே தவறு நடந்திருக்கலாம் என தெரியவருவதாக கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பரிமாறப்பட்ட ஒரு மின்னஞ்சலில், ஐநியூஸிற்கு செய்ததுபோலவே, கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளதாக ஐநியூஸ் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சந்தேகங்கள் பல ஆண்டுகளாக எழுந்ததாகவும், அதுபற்றி BARC நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் விசாரணை நடத்தவில்லை என்றும் ஐநியூஸ் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com