பாதாளச் சாக்கடையில் மூழ்கிய கார்... வெள்ளத்தில் இருவர் உயிரிழப்பு

ஃபரிதாபாத்தில் வெள்ளம் சூழ்ந்த பாதாளச் சாக்கடையில் எஸ்யூவி கார் மூழ்கியதில் வங்கி மேலாளர் மற்றும் காசாளர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம்
வெள்ளம்எக்ஸ் தளம்
Published on

டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக, IMD தரவுகளின்படி, டெல்லியில் இந்த மாதம் 1,000 மிமீ மழை பெய்துள்ளது. இது 2021-க்குப் பிறகு மிக அதிகமானது. இதன் காரணமாக சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் போக்கவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. இந்த நிலையில், ஃபரிதாபாத்தில் வெள்ளம் சூழ்ந்த பாதாளச் சாக்கடையில் எஸ்யூவி கார் மூழ்கியதில் வங்கி மேலாளர் மற்றும் காசாளர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிக்க: கொல்கத்தா | உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்த சஞ்சய் ராய்.. நார்கோ டெஸ்ட் என்றால் என்ன?

வெள்ளம்
டெல்லி வெள்ளம்| மழை நீரில் சிக்கி பறிபோன 3 ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் - டெல்லியில் நடந்தது என்ன?

குருகிராமில் உள்ள செக்டார் 31-ல் உள்ள தனியார் வங்கி கிளையின் மேலாளராக இருந்த புண்யஸ்ரேயா ஷர்மாவும், அங்கு காசாளராக இருந்த விராஜ் திவேதியும் பணி முடிந்து நேற்று மாலை மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் ஃபரிதாபாத்துக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பழைய ஃபரிதாபாத் ரயில்வே சுரங்கப்பாதையை அடைந்தபோது, அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் கண்டனர். ஆனால் தண்ணீர் எவ்வளவு உயரத்திற்கு இருக்கும் என்பதை அவர்களால் அறிய முடியவில்லை.

இதனால், சுதாரிப்பதற்குள் கார் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. அந்த வெள்ளத்தில் இரண்டு பேரும் காரில் இருந்து இறங்கி நீந்தி பாதுகாப்பாக செல்ல முயன்றனர். ஆனால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கார் வெள்ளத்தில் சிக்கியிருப்பது குறித்து தகவல் அறிந்துவந்த போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்கு இருவரின் உடல்களையும் கண்டெடுத்தனர்.

இதையும் படிக்க: ”இதுதான் கார்ப்பரேட் உலகின் உண்மைமுகம்”|பதிவுக்கு லைக்; பணிநீக்கம் செய்த நிர்வாகம்-புலம்பும் ஊழியர்!

வெள்ளம்
உத்தரப்பிரதேசம்: சட்டப்பேரவைக்குள் புகுந்த மழைநீர் #Video

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com