முக்கிய செய்தி|அக். மாதத்தில் 15நாட்கள் வங்கிகள் விடுமுறை; எந்த மாநிலம்,எந்தெந்த தேதிகள்? முழுவிபரம்

நடப்பு அக்டோபர் மாதத்தில் நாட்டில் உள்ள பல மாநிலங்களில் வங்கிகளுக்கு மட்டும் 15 விடுமுறை நாட்கள் வர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர், வங்கி விடுமுறை
அக்டோபர், வங்கி விடுமுறைஎக்ஸ் தளம்
Published on

நடப்பு அக்டோபர் மாதத்தில் நிறைய பண்டிகைகள் வர இருக்கின்றன. இதன் காரணமாக, இந்த மாதத்தில் மட்டும் வழக்கமான வார விடுமுறை நாட்களைத் தவிர்த்து இன்னும் பிற நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வங்கிகளின் பொது விடுமுறை நாட்கள் மாறுபடும். அந்த வகையில், விழா நாட்கள், தேசிய விடுமுறைகள், பிராந்திய மற்றும் மத விழாக்களுக்கான விடுமுறைகளுடன் சேர்த்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன், இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் நாட்டில் உள்ள பல மாநிலங்களில் 15 நாட்கள் விடுமுறை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு வங்கிச் சேவைகளை பாதிக்கலாம். எனவே, மக்களும் வாடிக்கையாளர்களும் அதுகுறித்த விடுமுறை தினங்களை அறிந்து முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளின்கீழ் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். ஆர்பிஐ விடுமுறை காலண்டரின்படி ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை நாட்கள். இதுதவிர, இந்த மாதத்தில் வரும் விடுமுறை நாட்களை அறிந்துகொள்வோம்.

இதையும் படிக்க: திருப்பதி ஏழுமலையான் கோயில்| நாளை விஐபி தரிசனம் ரத்து!

அக்டோபர், வங்கி விடுமுறை
இனி வாரத்தில் 5 நாள் மட்டும்தான் வங்கிகள் இயங்கும்?.. அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை?

அக்டோபர் 1: 3வது மற்றும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தலையொட்டி ஜம்மு - காஷ்மீரில் அனைத்து வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 2: மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியா முழுவதும் அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

அக்டோபர் 3: நவராத்ரா ஸ்தாபனத்திற்காக ராஜஸ்தானில் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 6: ஞாயிறு வார விடுமுறை என்பதால் இந்தியாவில் அனைத்து வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 10: துர்கா பூஜை/தசரா விழாவை முன்னிட்டு திரிபுரா, அசாம், நாகலாந்து மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

அக்டோபர் 11: மகாஷ்டமி/மகாநவமி/ஆயுத பூஜை/துர்கா பூஜைகளை முன்னிட்டு திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 12: மாதத்தின் 2வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை மற்றும் விஜயதசமியும் அதேநாளில் வருவதால் அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

அக்டோபர் 13: ஞாயிறு பொது விடுமுறை என்பதால் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.

இதில் அக்டோபர் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 3 விடுமுறை நாட்கள் வருகின்றன.

இதையும் படிக்க: ”செந்தில் பாலாஜி தியாகி என்றால் அவரிடம் ஏமாந்தவர்கள் யார்.?” - முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!

அக்டோபர், வங்கி விடுமுறை
பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - சரியான நடவடிக்கையா..?

அக்டோபர் 14: துர்கா பூஜையை முன்னிட்டு சிக்கிமில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

அக்டோபர் 16: லட்சுமி பூஜையை முன்னிட்டு திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

அக்டோபர் 17: மகரிஷி வால்மீகி ஜெயந்தி மற்றும் கதி பிஹுவை முன்னிட்டு கர்நாடகா, அஸ்ஸாம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.

அக்டோபர் 20: ஞாயிறு வார விடுமுறை என்பதால் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 26: மாதத்தின் 4வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்படும்.

அக்டோபர் 27: ஞாயிறு வார விடுமுறை என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 31: தீபாவளி, காளி பூஜை, நரக சதுர்த்தசி ஆகியவற்றிற்காக குஜராத், மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, அஸ்ஸாம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், டெல்லி தவிர பிற மாநிலங்களில் உள்ள வங்கிகளும் மூடப்படும்.

வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தாலும் தடையின்றி நிதி பரிவர்த்தனைகளை உறுதிசெய்யும் வகையில், ஏடிஎம் மற்றும் அனைத்து ஆன்லைன், டிஜிட்டல் பேங்கிங் சேவைகளும் முழுமையாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”இது எனக்கு பெரிய அவமானம்..” - IIFA விருது விழாவில் நடந்த மோசமான அனுபவம்.. கன்னட இயக்குநர் காட்டம்!

அக்டோபர், வங்கி விடுமுறை
வங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com