வங்கதேசத்தில் மட்டும்தான் எங்களுக்கு எந்த ஆதரவும் கிடைப்பதில்லை என இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
அண்மையில் வங்கதேச அணி வீரர் தமீம் இக்பால் உடன் பேஸ்புக் வாயிலாக உரையாடிய ரோகித் ஷர்மா இதனைக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர், “இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு உணர்ச்சி மிகுந்த ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. நாங்கள் தவறு செய்யும் போதெல்லாம் இந்திய ரசிகர்கள் அவர்கள் நன்கு புறத்திலிருந்தும் விமர்சனங்களை வைப்பார்கள்.
வங்கதேசத்திற்கும் அதே போல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எப்பொழுதெல்லாம் நாம் இணைந்து ஆடுகளத்தில் நிற்கிறோமோ அது நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கும். இந்தியாவிற்கு ரசிகர்களின் உறுதுணை இல்லாமல் விளையாடுவது கடினமாகவே இருக்கும்.அந்த வகையில் விளையாட்டில் எங்களுக்கு உற்சாகம் கிடைக்காத ஒரே இடம் வங்கதேசம்தான். நாங்கள் எங்கு சென்றாலும் விளையாடுவதற்கு உற்சாகம் கிடைக்கும். ஆனால் வங்கதேசத்தில் மட்டும் எங்களுக்கு அது கிடைக்கவே இல்லை. உண்மையில் வங்கதேச ரசிகர்கள் உங்கள் பின்னால் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள்” என்று கூறியுள்ளார்.