தந்தையை 1,200 கி.மீ சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற சிறுமிக்கு பால புரஸ்கார் விருது

தந்தையை 1,200 கி.மீ சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற சிறுமிக்கு பால புரஸ்கார் விருது
தந்தையை 1,200 கி.மீ சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற சிறுமிக்கு பால புரஸ்கார் விருது
Published on

கோவிட்-19 பொதுமுடக்கத்தின்போது, தனது நோயுற்ற தந்தையை ஹரியானாவிலிருந்து பீகார் வரை சைக்கிளில் சுமந்துச் சென்ற பதினாறு வயது சிறுமி ஜோதி குமாரிக்கு பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தின் போது ஹரியானாவிலிருந்து பீகாரின் தர்பங்காவுக்கு வீடு திரும்புவதற்காக, சுமார் 1,200 கிலோமீட்டர் தூரம் தனது நோயுற்ற தந்தையை சைக்கிளில் சுமந்து சென்ற 16 வயது சிறுமி ஜோதி குமாரிக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தின்போது மதிப்புமிக்க விருதைப் பெற்ற முப்பத்திரண்டு குழந்தைகளில் இவரும் ஒருவர். "பால புரஸ்கார் விருதைப் பெற்ற தர்பங்காவின் ஜோதி குமாரி மற்றும் அவரது எதிர்காலத்திற்கு அன்பான வாழ்த்துகள்" என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

"பின் இருக்கையில் இருந்த நோயுற்ற தந்தையுடன், 1,200 கி.மீ தூரத்தை மிதிவண்டியை மிதித்துக்கொண்டு ஓட்டிச்செல்வதன் மூலம் அவள் காட்டிய தைரியமும் வலிமையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது" என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

பால புரஸ்காருக்கு தேர்வு செய்யப்பட்ட 32 பேரில், கலை மற்றும் கலாச்சாரத் துறையில் ஏழு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. புதுமைக்காக ஒன்பது விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, ஐந்து விருதுகள் கல்விசார் சாதனைகளுக்கு, ஏழு குழந்தைகள் விளையாட்டு பிரிவில் விருதை வென்றுள்ளன. மூன்று குழந்தைகள் துணிச்சலுக்காக பாராட்டப்பட்டுள்ளன, ஒரு குழந்தை சமூக சேவை துறையில் விருதினை வென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com