போதைப்பொருள் வழக்கில் கைது செய்யபட்டுள்ள ஆர்யன்கானுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது குறித்து சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன்கான் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யபட்டது. ஏற்கெனவே 2 முறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 20ம் தேதி தாக்கல்செய்யபட்ட மற்றொரு மனுவும் நிராகரிக்கப்பட்டது. சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆர்யன் கான் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 3-வது முறையாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது ஜாமீன் மனு மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு நடைபெற்று வருகிறது. ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சாம்ப்ரே அடங்கிய ஒரு நீதிபதி அமர்வு முன் தொடங்கியது. மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடி வரும் நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது சற்று நேரத்தில் தெரியவரும்.