பாஜகவின் அமோக வெற்றிக்கு பின்னால் பெரும் பங்காற்றியவர்கள்! யார் அவர்கள்?

பாஜகவின் அமோக வெற்றிக்கு பின்னால் பெரும் பங்காற்றியவர்கள்! யார் அவர்கள்?
பாஜகவின் அமோக வெற்றிக்கு பின்னால் பெரும் பங்காற்றியவர்கள்!  யார் அவர்கள்?
Published on

இந்தியாவே எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுக்கு வந்துள்ளது. ஆளும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. எதிர்க்கட்சிகளின் வியூகங்கள், மூன்றாம் அணி எதிர்பார்ப்பு என அனைத்தையும் பாஜக காணாமல் ஆக்கியுள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் இருப்பது பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் மட்டுமல்ல. Back Room Team எனப்படும் பாஜகவின் வெற்றிக்கு பின்னணியில் பெரும் பங்காற்றியவர்கள் யார்? 

பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியால் உத்திரப் பிரதேசத்தில் கடந்தமுறையைவிட குறைந்த தொகுதிகளே கிடைக்கும் என பாஜகவினர் கணித்திருந்தனர். இந்த இழப்பை மேற்குவங்கத்தில் ஈடுகட்ட அவர்கள் முடிவு செய்தனர். இதற்காக களம் இறக்கப்பட்டவர்தான் கைலாஷ் விஜய்வர்கியா. மேற்கு வங்கத்தில், இந்துத்வா கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டி, தேர்தல் பரப்புரைக்கு இணையாக மக்களை ஒருங்கிணைத்தார்.

மகாராஷ்ட்ராவின் கரும்பு விவசா‌ய மண்டலத்தில் தேசியவாத காங்கிரசை எழ விடாமல் தடுத்தவர் தேவேந்திர பட்நவிஸ். மகாராஷ்ட்ர முதல்வரான இவர், மத்திய, மாநில அரசுகளின் விவசாய ஆதரவு திட்டங்களை ஒவ்வொரு வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தார்.

(தேவேந்திர பட்நவிஸ்)

ஹரியானாவில் ‌இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்து மத்திய அரசுக்கு சவால் கொடுத்த ஜாட் ‌இனத்தவரின் கோபத்தை கட்டுப்படுத்தியவர் மனோகர் லால் ‌கட்டார். ‌ஹரியானா முதல்வரான இவர், கடுமையாக பணியாற்றி வாக்குகளை காங்கிரசுக்கு எதிராக திரு‌ப்பினார்.

உத்தரப் பிரதேசத்தில் மகா கூட்டணியை நெருங்க விடாமல் தடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் சுனில் பன்சால். அமித் ஷாவின் வலதுகரமான ‌இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். உத்‌தரப் பிரதேசத்தில் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி களப்பணியாற்றியதில் பம்பரமாக சுழன்றவர்.

(சுனில் பன்சால்)

ராஜஸ்தானில் காங்கிரஸ் ‌ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வெற்றியை பாரதிய ‌ஜனதாவுக்கு மடை மாற்றி விட்டதில் முக்கியமான‌வர் பிரகாஷ் ஜவடேகர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரான இவர், ராஜஸ்தானில் ஜாதி ரீதியான அமைப்புகள், கட்சிகளை பாரதிய ஜனதா அணிக்கு ஆதரவாக திருப்பி வெற்றி கண்டவர்.

(அனில் ஜெயின்)

காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான சத்திஷ்கரில் பாரதிய ஜனதாவின் அமோக வெற்றியில் பங்காற்றியவர் அனில் ஜெயின். எம்.பி.க்களுக்கு எதிரான மனநிலையை மாற்றும் நோக்கில், கடந்த மக்களவைத் தேர்தலில் வென்றவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், 10 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கச் செய்தவர். மாநிலத்தில் மொத்தமுள்ள 11 இடங்களில் 9 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதில் இவரும் முக்கியமானவர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com