பாபர் மசூதி இடிப்பு: அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

பாபர் மசூதி இடிப்பு: அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
பாபர் மசூதி இடிப்பு: அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
Published on

பாபர் மசூதி இடிப்பை தடுக்க தவறிய அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

1992ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் கோடிக்கணக்கு மதிப்பிலான பொதுச் சொத்துகளும், தனியார் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. இவை தவிர ஏராளமான பாலியல் வன்கொடுமைகளும் மனித உரிமை மீறல்களும் அரங்கேறியது.

இந்நிலையில் இதனைத் தடுக்க தவறிய அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது தொடரப்பட்டு பல ஆண்டுகளாக அது விசாரிக்கப்படாமல் நிலுவையிலேயே இருந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி பாபர் மசூதி அயோத்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விரிவான தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில் மீண்டும் இந்த வழக்குகளை விசாரிக்க அவசியப்படவில்லை என்றும் மனுவை தாக்கல் செய்த மனுதாரர் கூட இறந்துவிட்டார். எனவே இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இதையும் படிக்க: என்.எஸ்.இ முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com