பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 30-ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் தீர்ப்பின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இதில் சிபிஐ தரப்பில் 351 பேர் சாட்சியம் அளித்திருந்தனர். மேலும் சுமார் 600 ஆவணங்களும் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. முன்னதாக 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணை முடிவடைவதற்கான காலம், கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம், மேலும் மூன்று மாத கால அவகாசம் அளித்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று கூறியது.
இனி எந்த கால தாமதமும் இருக்கக்கூடாது எனவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.