தீபிகா படுகோன் என்னை ஆலோசகராக்கலாம்: யோகா குரு ராம்தேவ்

தீபிகா படுகோன் என்னை ஆலோசகராக்கலாம்: யோகா குரு ராம்தேவ்
தீபிகா படுகோன் என்னை ஆலோசகராக்கலாம்: யோகா குரு ராம்தேவ்
Published on

நடிகை தீபிகா படுகோன் தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என யோகா குரு ராம்தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

டெல்லியிலுள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூரத் தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். பலர் ரத்தக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தாக்குதலுக்கு ஆளான மாணவர்களை நேரில் சென்று சந்தித்து ஆதரவு அளித்தார். மாணவர்களுக்கு ஆதரவளித்ததை ஒரு தரப்பினர் பாராட்டினாலும், இவர் மீதும் கடுமையான விமர்சனத்தை ஒரு தரப்பினர் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை தீபிகா படுகோன் தன்னை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என யோகா குரு ராம்தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சமூக-அரசியல் பிரச்னைகளை குறித்து எந்த ஒரு நிலைபாட்டையும் எடுப்பதற்கு முன் தீபிகா படுகோன் தன்னிடம் ஆலோசனை பெற்றால் அவருக்கு பிரச்னை எழாது என ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்திற்கு தீபிகா படுகோன் நேரில் சென்று ஆதரவு அளித்திருந்ததை சுட்டிக்காட்டியே, ராம்தேவ் இந்தக் கருத்தினை தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com