“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்

“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்
“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்
Published on

வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள், அதனை சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம் என்ன ? என்று சமாஜ் வாடி கட்சியின் ஆசம் கான் கூறியுள்ளனர். 

வெங்காய விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வெங்காயம் சாப்பிடுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் அதிகமாக வெங்காயமோ அல்லது பூண்டோ சாப்பிடுவதில்லை. ஆகவே கவலை வேண்டாம். வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி அதிகம் அக்கறை கொள்ளாத ஒரு குடும்ப பழக்கத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அதேபோல், வெங்காய விலை உயர்வு குறித்து பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே, “நான் ஒரு வெஜிடேரியன். வெங்காயத்தை ஒரு போதும் சுவைத்ததேயில்லை. அப்படியிருக்கையில், என்னைப் போன்ற ஒருவருக்கு எப்படி சந்தையில் இருக்கும் வெங்காயத்தின் விலை நிலவரம் தெரியும்” என்றார்.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் ஆசம் கான் இதுகுறித்து பேசிய போது, “வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். அதனை சாப்பிட வேண்டுமென்ற கட்டாயம் என்ன ? நம்முடைய ஜெயின் சகோதரர்கள் அதனை சாப்பிடுவதில்லை. அதனால், வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். அதேபோல், பூண்டு சாப்பிடுவதையும் நிறுத்துங்கள், அசைவம் சாப்பிடுவதையும் நிறுத்துங்கள். எல்லாமே மிச்சமாகும். ஒருமுறை ராணி ஒருவர், ‘அவர்களிடம் பிரட் இல்லையென்றால், கேக் சாப்பிடட்டும்’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com