ராணுவ வீரர்கள் பற்றி தரக்குறைவாக பேச்சு: மீண்டும் சர்ச்சையில் ஆஸம் கான்

ராணுவ வீரர்கள் பற்றி தரக்குறைவாக பேச்சு: மீண்டும் சர்ச்சையில் ஆஸம் கான்
ராணுவ வீரர்கள் பற்றி தரக்குறைவாக பேச்சு: மீண்டும் சர்ச்சையில் ஆஸம் கான்
Published on

காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அத்துமீறும் ராணுவ வீரர்களை பழிக்கு பழியாக பெண்கள் அடித்து துவைப்பதும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளை நறுக்கும் சம்பவமும் நடைபெறுவதாக சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆஸம் கான் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் ஆஸம் கான். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். அவர் தற்போது ராணுவ வீரர்கள் குறித்து புதிய கருத்தை ஒன்றை சொல்லி சிக்கலில் மாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஆஸம் கான், காஷ்மீர், திரிபுரா, ஜார்க்கண்ட், பெங்கால் உள்ளிட்ட இடங்களில் பெண்களிடம் ராணுவ வீரர்கள் அத்துமீறி நடந்துகொள்வதாகவும், அதனால் பெண்கள் ராணுவ வீரர்களை அடிப்பதும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளை வெட்டுவதும் நடைபெறுவதாக சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

அஸம் கானின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக அதிகாரி ஒருவர், சமாஜ்வாதி கட்சி அஸம் கானை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தற்போது பேச்சு சுதந்திரம் இருப்பதாக கூறி பலரும் ராணுவத்தினர் குறித்து தரம் தாழ்ந்த கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com