இந்தியா
புதுச்சேரி: ‘பொது இடங்களில் ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை காணலாம்!’ - அமைச்சர்
ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை புதுச்சேரியில் பொது இடங்களில் நேரலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பொது இடங்களில் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை நேரலை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரலங்கள், விளையாட்டுத்துறையினர் கலந்து கொள்கின்றனர்.
இதையடுத்து ராமர் கோயில் நிகழ்வை நாடு முழுவதும் பொது இடங்களில் நேரலை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை புதுச்சேரியில் பொது இடங்களில் நேரலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 300-க்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகத்தை நேரலை செய்யவுள்ளதாக பாஜக மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி தெரிவித்துள்ளார்.