மோடி, யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்த முஸ்லிம் பெண்.. சாம்பாரை ஊற்றி ’தலாக்’ சொன்ன கணவர் மீது வழக்கு!

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசிய பெண் ஒருவருக்கு, அவரது கணவர் முத்தலாக் சொல்லி அவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
model image
model imagefreepik
Published on

இஸ்லாம் சமூகத்தில், ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலும் தொடர்ந்தது. இதனால் அச்சமூகப் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடைசெய்யும் வகையில் முத்தலாக் என்னும் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டம் ஆகஸ்ட் 1, 2019 முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் ’தலாக்’ முறையில் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு நீதி கிடைத்தது. மேலும், அவர்களுக்கான உரிமையும் கிடைக்கப் பெற்றது. இஸ்லாம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கிறது. எனினும், இன்னும் சில இஸ்லாம் மக்களிடையே இதுபோன்ற ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையில் இருக்கிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மரியம், அர்ஷத் என்பவரை, கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளார். இவருக்கு, கணவரின் ஊரான அயோத்தியின் வளர்ச்சி பிடித்துப் போயுள்ளது. இதையடுத்து அயோத்தியின் வளர்ச்சிக்குக் காரணமான பிரதமர் மோடியையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் மரியம் புகழ்ந்து பேசியுள்ளார். இதை, அவரது கணவர் முன்பே எடுத்துரைத்துள்ளார். இதனால், கோபமுற்ற அவரது கணவர், மரியத்தை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். இதையடுத்து, பெரியவர்கள் அவரை சமாதானம் செய்துவைத்து, மீண்டும் அர்ஷத்தின் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதையும் படிக்க: IPL 2025| மும்பை அணியிலிருந்து வெளியேறும் ரோகித்? ரூ.20 கோடிக்கு வாங்க தயாராகும் அணிகள்!

model image
சிறுநீரக தானம் செய்த மனைவி.. ’தலாக்’ சொல்லி அதிர்ச்சி கொடுத்த கணவர்.. உ.பி-யில் அரங்கேறிய சம்பவம்!

ஆனால், பிரதமரையும், முதல்வரையும் புகழ்ந்து மரியம் பேசியதால் கடும் கோபத்தில் இருந்த அர்ஷத் அவரை அடித்து உதைத்ததாகவும், கொதிக்கும் சாம்பாரை அவரது மேல் ஊற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும், மரியத்தை பார்த்து, ’தலாக்’ என்று மூன்று முறை கூறியுள்ளார். தொடர்ந்து, அர்ஷத்தின் குடும்பத்தினரும் மரியத்தின் கழுத்தை நெரித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மரியம் வெளியிட்டுள்ள வீடியோவில், “கடந்த ஆண்டு எனக்கும், அயோத்தியைச் சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்துக்காக எனது தந்தை அவரால் முடிந்ததைவிட அதிக செலவு செய்துள்ளார். பின்னர், திருமணம் முடிந்த கையோடு அயோத்திக்குச் சென்றோம். அந்நகரின் சாலைகள், வளர்ச்சி, அதன் சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால், பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை புகழ்ந்து பேசினேன். இதனால், ஆத்திரமடைந்த அர்ஷத் என்னை எனது பிறந்த வீட்டிற்கே அனுப்பிவைத்தார். உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டில் சேர்த்துவைத்தனர். ஆனாலும், பிரதமரையும், முதல்வரையும் புகழ்ந்து பேசியதால் என்னை மிகவும் மேசமாக திட்டினார். மேலும், முத்தலாக் சொல்லி, முகத்தில் சாம்பாரை ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். எனது மாமியார், கணவரின் சகோதரர், சகோதரி ஆகியோர் சேர்ந்து என் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றனர்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: கே.எல்.ராகுல் நடத்திய ஏலம்.. ரூ.40 லட்சத்திற்கு ஏலம் போன விராட் கோலியின் ஜெர்சி!

model image
பல்வரிசை சரியில்லை எனக்கூறி முத்தலாக் கூறிய கணவர்!

இச்சம்பவம் குறித்து மரியம் பஹ்ரைச் நகர காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கணவர் அர்ஷத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 8 பேர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், கடந்த 2022ஆம் ஆண்டும் உபியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்த தனது மனைவி ஷானா இராமை, முகமது நதீம் என்பவர்மும்முறை 'தலாக்’ சொல்லி வீட்டைவிட்டு அனுப்பியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க; மகாராஜா டி20 டிராபி: 3வது சூப்பர் ஓவர் வரை சென்ற ஆட்டம்.. இறுதியில் மணிஷ் பாண்டே அணி வெற்றி!

model image
பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத்தை ஆதரித்ததால் மனைவிக்கு 'முத்தலாக்' கொடுத்த கணவர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com