இந்தியாவிலும் உள்நாட்டு போர் வெடிக்கும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

இந்தியாவிலும் உள்நாட்டு போர் வெடிக்கும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இந்தியாவிலும் உள்நாட்டு போர் வெடிக்கும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
Published on

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தால் இந்தியாவிலும் உள்நாட்டு போர் வெடிக்கும் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

ராமர் கோயில் பிரச்சினையில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக, இந்துக்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமீபகாலமாக ஈடுபட்டுள்ளார். இதுவரை லக்னோ, டெல்லி, பெங்களூரு, சென்னை, அயோத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் முஸ்லிம், இந்து குழுக்களில் 500க்கும் மேற்பட்டவர்களுடன் ராமர் கோயில் தொடர்பாக சமரசப் பேச்சில் ரவிசங்கர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அயோத்தி பிரச்னையை இணக்கமாக தீர்க்காவிட்டால் இந்தியாவில் உள்நாட்டு போர் ஏற்படும் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்துக்கு அவர் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறுகையில், “தீவிரமாக செயல்பட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று இருதரப்பை சார்ந்தவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் உள்நாட்டு போர் உருவாகும் நிலைக்கு நாடு தள்ளப்படும். வழங்கப்பட்டுள்ள நான்கு வழிமுறைகளையும் நீதிமன்றம் வழியாகவும், அரசாங்கம் வழியாகும் பின்பற்றினால் நாட்டிற்கு பேரழிவாக மாறிவிடும். குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com