அயோத்தி: ராமர் கோவிலில் 20 அர்ச்சகர் பதவிக்கு 3000 பேர் விண்ணப்பம்! விரைவில் நேர்காணல்!

அயோத்தியில் ராமர் கோவில் அர்ச்சகர் பதவிக்கு 3000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ராம ஜென்ம பூமி
ராம ஜென்ம பூமிPT
Published on

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் வருகின்ற ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ராமர் கோவிலுக்கு அர்ச்சகரை நியமிக்க ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தீர்மானம் செய்திருந்தது. அதன்படி தேவையான காலியிடங்கள் 20க்கு தகுந்த அர்ச்சகரை நியமனம் செய்ய ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை விளம்பரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அதன்படி 20 அர்ச்சகர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 3000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் நேர்காணலுக்கு 200 பேரை நிர்வாகம் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களின் நேர்காணலானது கரசேவக்புரத்தில் நடைபெறவுள்ளது.

இறுதி நேர்காணலாக 200 பேரிலிருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆறுமாத பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு அவர்கள் அனைவரும் ராமஜென்ம பூமி வளாகத்தில் வெவ்வேறு பணிகளில் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

இதில் தேர்வாகாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், அவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அர்ச்சகர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

PT

இந்த நேர்காணலில் கலந்துக்கொண்டவர்களிடம் வழிபாடு தொடர்பான கடினமான கேள்விகள் கேட்க்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் இருபது அர்ச்சகர்களுக்கு உணவு மற்றும் தங்கு வசதி இலவசமாகவும் வழங்கப்படுவதுடன், சம்பளமாக அவர்களுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com