கடவுள் சிலைகள் மீது தங்க நாணயங்களை எறியாதீர்: உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

கடவுள் சிலைகள் மீது தங்க நாணயங்களை எறியாதீர்: உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
கடவுள் சிலைகள் மீது தங்க நாணயங்களை எறியாதீர்: உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
Published on

அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கடவுள் சிலைகள் மீது தங்க நாணயங்களை எறியக் கூடாது என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது அமர்நாத். இந்துக்களின் மிக முக்கிய புனித தலமாக பார்க்கப்படும் இப்பகுதி 14 ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே உள்ளது. அங்கு சிறப்பு வாய்ந்த அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்யப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பக்தர்கள், அங்கு ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெண்கள் சேலை அணிந்து வரக்கூடாது எனவும் சல்வார் கமீஸ், பேண்ட்- சர்ட் டிராக்சூட் போன்றவற்றை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

கர்ப்பிணி பெண்கள், 13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 75 வயதுக்கு மேல் உள்ளோருக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. வெறும் வயிற்றில் பயணம் மேற்கொண்டால் அது ஆபத்தான உடல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. கடவுள் சிலைகளின் மீது நாணயங்கள், தகடுகள், கைக் காப்புகள், வெள்ளி மற்றும் தங்க நாணயங்களை எறிய வேண்டாம் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

யாத்திரை மேற்கொண்டுள்ள பகுதிகளில் இலவச உணவுகள் கிடைக்கும் எனவும் பிற மாநிலங்களில் வாங்கிய சிம் கார்டுகள் யாத்திரைப் பகுதியில் செயல்படாது எனவும் அந்தப் பகுதிகளில் உபயோகிக்க அங்கு சிம் கார்டுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com