குறைந்தது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டு வருகிறது.
பயணிகள் ரயில்களின் வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக பொதுவான குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனையடுத்து PASSENGER ரயில்களின் வேகத்தை குறைந்தது மணிக்கு 80 கிலோ மீட்டர் வரை செல்லும் அளவிற்கு உயர்த்த திட்டமிட்டு வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
குறிப்பாக, அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டிச் செல்லக்கூடிய இருப்புப் பாதைகளை அமைப்பது, சிறந்த 100 சுற்றுலாத் தலங்களை இணைப்பது, 45 நகரங்களில் பைபாஸ் அமைப்பது, மின்சார ரயில்களை அதிகப்படுத்துவது, தனியார் ரயில்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.