‘2019இல் மட்டும் தினந்தோறும் இந்தியாவில் சராசரியாக 381 தற்கொலைகள்’ :என்.சி.ஆர்.பி.

‘2019இல் மட்டும் தினந்தோறும் இந்தியாவில் சராசரியாக 381 தற்கொலைகள்’ :என்.சி.ஆர்.பி.
‘2019இல் மட்டும் தினந்தோறும் இந்தியாவில் சராசரியாக 381 தற்கொலைகள்’ :என்.சி.ஆர்.பி.
Published on

கடந்த 2019 இல் மட்டுமே இந்தியாவில் சுமார் 139123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  சராசரியாக நாளொன்றுக்கு  381 பேர் தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது தேசிய குற்றப்பதிவு ஆணையம் (என்.சி.ஆர்.பி).

இந்த எண்ணிக்கை அதற்கு முன்தைய ஆண்டுகளான 2018 (1,34,516) மற்றும் 2017 (1,29,887) ஒப்பிடும்போது சுமார் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.சி.ஆர்.பி-யின் அறிக்கையின்படி 2019 இல் ஊரக பகுதிகளை (10.4 சதவீதம்) காட்டிலும் நகரங்களில் தற்கொலை விகிதம் (13.9 சதவீதம்) அதிகமாக இருந்துள்ளது.

தூக்கு மாட்டிக் கொள்ளுதல் (53.6 சதவீதம்), விஷம் உட்கொள்வது (25.8 சதவீதம்), நீரில் மூழ்குவது (5.2 சதவீதம்) ஆகிய வழிகளில் பெரும்பாலானவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் என்.சி.ஆர்.பி தெரிவித்துள்ளது.

குடும்ப பிரச்சினை, திருமணம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்பட்ட நோய் மாதிரியானவை 55 சதவிகித  தற்கொலைகளுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட 100 பேரில் 70.2 ஆண்கள் என்றும், 29.8 பெண்கள் என்றும் என்.சி.ஆர்.பி சொல்லியுள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 68.4 சதவீதம் பேர் திருமணமானவர்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

மஹாராஷ்டிராவில் (18,916) அதிகளவிலான தற்கொலைகள் பதிவாகியுள்ளன, அதற்கடுத்தபடியாக தமிழகம் 13,493, மேற்கு வங்கம் 12,665, மத்திய பிரதேசதம் 12,457 மற்றும் கர்நாடகாவில் 11,288 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் 49.5 சதவிகித தற்கொலைகள் பதிவாகியுள்ளன.

அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் வெறும் 3.9 சதவீத தற்கொலைகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

தற்கொலை ஒரு தீவிரமான பிரச்சினை என்றும், சரியான நேரத்தில் அது மாதிரியான எண்ணங்களை கொண்டவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டால் தற்கொலைகளை தடுக்கலாம் எனவும் உலக பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com