பெங்களூர்: பயணி தவறவிட்ட ரூ.2.6 லட்சம் - தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!

பெங்களூர்: பயணி தவறவிட்ட ரூ.2.6 லட்சம் - தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!
பெங்களூர்: பயணி தவறவிட்ட ரூ.2.6 லட்சம் - தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!
Published on

பயணி தவறவிட்ட ரூ.2.6 லட்சம் பணத்தை அவரிடமே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டினார்.

பெங்களூரில் ஆட்டோ ஓட்டி வருபவர் குமார் (54). சில நாட்களுக்கு முன்பு குமாரின் ஆட்டோவில் மும்பையைச் சேர்ந்த அமித் குமார் பாண்டே என்பவர் சவாரி செய்துள்ளார். காட்டன்பேட்டில் ஏறிய அவரை சாமராஜ்பேட்டையில் உள்ள எட்கா மைதானத்திற்கு அருகே இறக்கிவிட்டுள்ளார். இறக்கிவிட்ட இடத்தில் மற்றொரு பயணி சவாரிக்காக குமாரின் ஆட்டோவில் ஏறினார். அப்போது அந்த பயணி ஆட்டோ பின் சீட்டில் கிடந்த பை ஒன்றில் பணம் இருப்பதை பார்த்து குமாரிடம் கூறியுள்ளார். இதற்கு முன் ஏறிய அமித் குமார் பாண்டே என்ற அந்த பயணிதான் இந்த பணப்பையை மறந்துபோய் விட்டுச் சென்றிருக்கக் கூடும் என்பதை புரிந்துகொண்ட குமார், உடனடியாக அவரை இறக்கிவிட்ட இடத்திற்கு ஆட்டோவில் திரும்பிச் சென்றார்.

அந்த பயணி ஆட்டோவில் இருந்து இறக்கியதும் ஒரு கடைக்குள் செல்வதை குமார் அறிந்து வைத்திருந்தார். எனவே அந்த கடைக்குள் சென்று பயணி குறித்து விசாரித்து அவரின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு பணப்பை குறித்து தெரியப்படுத்தினார்.

இதையடுத்து போலீசாருடன் வந்த அந்த பயணி, குமாரிடம் இருந்து பணப்பையை பெற்றுக்கொண்டார். பையில் ரூ.2.6 லட்சம் பணம் ரொக்கமாக இருந்ததாகவும், பணம் அப்படியே இருப்பதாகவும் போலீசாரிடம் அந்த பயணி கூறினார்.

இதையடுத்து பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பாட்டீல், ஆட்டோ டிரைவர் குமாரின் நேர்மையை பாராட்டி வெகுமதியாக ரூ.8,000 வழங்கி கவுரவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com