மும்பையில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, விரார் ரயில்வே நிலையத்திற்குள் ஆட்டோ எடுத்து வந்த நபர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
மும்பையின் உள்ளூர் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த 4-ஆம் தேதி பயணித்துள்ளார். மும்பையின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் அதிகரித்துள்ளது. ஆகவே இந்த உள்ளூர் ரயில் விரார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரின் கணவர் வெளியே இருந்த ஆட்டோ ஒன்றை பிடித்து வந்துள்ளார். இந்த ஆட்டோவை ஓட்டுநர் ரயிலின் நடைமேடையில் இயக்கி ரயில் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சென்று அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவினார்.
இந்த ஆட்டோ ஒட்டுநர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் ஆட்டோவை இயக்கியதால் அவர் கைது செய்யப்பட்டார். எனினும் அவர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.