கடுமையான கொரோனா நெருக்கடி நிலவும் இந்தியாவுக்கு, உடனடி உதவி தொகுப்பின் ஒரு பகுதியாக ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், பிபிஇ கிட்களை அனுப்ப ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்திருக்கிறது.
கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ள இந்தியாவுக்கு, உடனடி உதவி தொகுப்பின் ஒரு பகுதியாக ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை ஆஸ்திரேலியா அனுப்பும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்தார்.
மேலும் “இந்தியாவின் உதவிக்கு என்ன அனுப்பலாம் என்று பரிசீலிக்கும் பணியில் உள்ளோம். இந்தியாவுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. மேலும் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை வழங்குவோம்” என்று அவர் கூறினார்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை நிலவுகிறது.