ஆஸ்திரேலியாவில் எரிந்துவரும் காட்டுத்தீயை அணைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
சிட்னியில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென அந்நாட்டு பந்துவீச்சாளர்கள் அறிவித்துள்ளனர். அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின், தான் பிக் பேஷ் லீக் தொடரில் விளாசும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் சுமார் 12 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளார். பிக் பேஷ் லீக்கில் விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் FAWAD AHMED, தான் வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் மற்றும் விளாசும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் சுமார் 12 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
இதேபோல, ஆஸ்திரேலிய வீரர்கள் பீட்டர் சிடில், ஆடம் ஸாம்பா, கனே ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் பிக் பேஷ் லீக்கில் தாங்கள் வீழ்த்தும் விக்கெட்டுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க அந்நாட்டு அரசு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.