கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா!!

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா!!
கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்: ஆடியோ வெளியிட்ட ஸ்வப்னா!!
Published on

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னாவை போலீசார் தேடி வரும் நிலையில் அவர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரக விலாசத்திற்கு, விமானம் மூலம் வந்த 13 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை கேரள சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐ.டி., பிரிவின் தற்காலிக ஊழியராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் சிக்கியிருப்பது கேரள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வப்னா சுரேஷ், தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐ.டி., துறையில் பணியாற்றுகிறார். இவருக்கான ஆறு மாத ஒப்பந்த பணி கடந்த ஜூன் மாதமே முடிந்தும் அவர் கேரள அரசின் ஐ.டி., துறையின் கட்டுப்பாட்டில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தற்போது ஸ்வப்னாவை போலீசார் தேடி வரும் நிலையில் அவர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனக்கும் இந்த தங்கக் கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

''ஐக்கிய அரபு அமீரக தலைவர்'' என்னிடம் 'ஏன் தாமதம்' என்று கேட்டார். அதனால் நான் ''டிப்ளமாட்டிக் பார்சல்''ஐ சரி செய்துகொடுக்க சுங்கத்துறை உதவி ஆணையாளர் ராமமூர்த்தியிடம்
பேசினேன். அது தவிர வேறொன்றும் எனக்கு தெரியாது. எந்த தொடர்பும் இல்லை. நான் பார்க்கும் வேலை தொடர்பாக பெரிய அதிகாரிகள், அரசு பணியாளர்கள், முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் உட்பட எல்லா அரசியல் கட்சியினருடன் பேசியிருக்கிறேன். பழகியிருக்கிறேன். இந்த தொடர்பு அனைத்தும் ஐக்கிய அமீரக தூதரக தலைவர் சொல்லும் பணிக்காக மட்டுமே தவிர வேறெதுவும் கிடையாது. சொந்த நலனுக்காக யாரிடமும் பேசியது இல்லை.


ஒரு பெண்ணாகிய என்னை இப்படி “ப்ரேம்” செய்து, என்னையும் என் குடும்பத்தையும் தற்கொலையின் விளிம்பில் கொண்டு வந்து மீடியாவும், மற்றவர்களும் நிறுத்தியுள்ளனர். நான் எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் இந்த துரோகம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் மட்டும் தான். வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நீங்கள் தான் எங்கள் மரணத்திற்கு உத்தரவாதம்.நான் இப்போது தலைமறைவக இருப்பது, பெரிய தங்க கடத்தல் குற்றம்செய்ததற்காக அல்ல. பயத்தினால் தான். எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகத்தான்.

தேர்தலுக்காக அரசியல் செய்யாமல் உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என்னையும் விசாரியுங்கள். யாருக்காகவோ இப்படிசெய்கிறார்கள். இது தொடர்ந்தால் என்னைப்போன்ற ஏரளமான“ஸ்வப்னா”க்கள் இந்த நாட்டில் உயிரிழப்பார்கள்”. எனத் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com