“ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை” - மத்திய அரசு வழக்கறிஞர் புது விளக்கம்

“ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை” - மத்திய அரசு வழக்கறிஞர் புது விளக்கம்
“ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை” - மத்திய அரசு வழக்கறிஞர் புது விளக்கம்
Published on

ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டதாக தான் கூறவில்லை, அவற்றின் நகல்களை மனுதாரர் பயன்படுத்தியதாக என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் அதை விசாரிக்க வேண்டுமென்றும் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் கடந்த டிசம்பர் ‌மாதம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதில், ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்ச‌நீதிமன்றம்  தீர்ப்பில் கூறியிருந்தது.

இதனையடுத்து தீ‌ர்ப்பை மீண்டும் விசாரிக்க வேண்டுமென கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் மத்திய அரசு ரஃபேல் வழக்கில் பல தகவல்களை மறைத்துள்ளதாகவும் எனவே, தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் எனக் கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது. இதில், வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், திருடுபோன ரஃபேல் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் ஹிந்து பத்திரிகை தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆவணங்களை ஏற்கக்கூடாது என்றும் வேணுகோபால் தெரிவித்தார். பின்னர் அரசுத் தரப்பு வாதங்கள் முடிவற்ற நிலையில் வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இதையடுத்து ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடு போனதாக வெளிவந்த தகவல்கள் ஊடங்களில் செய்திகளாக வெளியாகி, பல விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், உச்சநீதிமன்றத்தில் அவர் முன்வைத்த வாதங்கள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிடிஐ நிறுவனத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், “நான் உச்சநீதிமன்றத்தில் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ரஃபேல் ஆவணங்கள் பாதுகாப்பு துறை அமைச்சக்கத்திடமிருந்து திருடப்படவில்லை. அந்த ஆவணங்களின் நகல் தான் பத்திரிகைகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதை தான் எதிர் மனு தாரர்கள் பயன்படுத்தியுள்ளனர் என நான் குறிப்பிட்டேன்” என விளக்கமளித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com