சென்டினல் தீவு பூர்வகுடிகளின் அம்பு தாக்குதல்... கடற்படை அதிகாரியின் திக் அனுபவம்!

சென்டினல் தீவு பூர்வகுடிகளின் அம்பு தாக்குதல்... கடற்படை அதிகாரியின் திக் அனுபவம்!
சென்டினல் தீவு பூர்வகுடிகளின் அம்பு தாக்குதல்... கடற்படை அதிகாரியின் திக் அனுபவம்!
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் ஜாவ், அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் அங்குள்ள பூர்வகுடிகளால் கொல்லப்பட்டுள்ளார்.  அந்த தீவுக்குள் யார் சென்றாலும் அவர்களை கொன்று விடுவார்கள் என்பதால் ஜானின் உடலை மீட்க யாரும் செல்லவில்லை.

மக்களிடம் இருந்து விலகியே இருக்கும் அந்த பூர்வகுடிகளைப் பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் இந்திய கடலோரக் காவற் படை அதிகாரி பிரவீன் கவுர். அவர் கூறியதாக, என்டிடிவி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2006 ஆம் ஆண்டு அந்தமான் போர்ட் பிளேயரை சேர்ந்த இரண்டு மீனவர்களைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் நாங்கள் இறங்கினோம். பல்வேறு பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று தேடிய நாங்கள், வடக்கு சென்டினல் தீவின் அருகில் ஒரு படகைக் கண்டோம். அது, அந்த மீனவர்களின் படகாக இருக்கலாம் என்று ஹெலிகாப்டரை அந்த பீச்சில் தரையிறக்க முடிவு செய்தோம்.

அப்போது திடீரென்று சென் டினல் பூர்வகுடிகள், சுமார் 50 பேர் அங்கு கூடிவிட்டனர். அவர்கள் கையில் வில், அம்பு மற்றும் ஈட்டிகள் இருந்தன. அவர்களில் பெண்கள் யாரும் இல்லை. சிவப்பு நிறத்தில் இடுப்பில் ஆடை அணிந்திருந்தனர். ஹெலிகாப்டர் கீழே இறங்குவதை கண்ட அவர் கள், எங்களை நோக்கி குறிபார்த் து அம்புகளை எய்தனர். அவை, நூறு மீட்டர் தூரம் வரை பாய்ந்து வந்தன. அதற்கு மேல் வரவில்லை. 

இதையடுத்து உடனடியாக எங்கள் திட்டத்தை மாற்றினோம். ஹெலிகாப்டரை வேகமாகத் திருப்பி மேற்கு நோக்கி சென்றோம். அதை விரட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடர்ந்து வந்தனர். சில கிலோ மீட்டர் தூரை சென்றதும் வேகமாக ஹெலிகாப்டரை திருப்பி, பீச்சின் அருகே வந்து விட்டோம். உடனடியாக எங்கள் வீரர் கீழே இறங்கி படகை பார்த்தார்.

அதில் ஒரு உடல் கிடந்தது. கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொல்லப்பட்டு கிடந்தது அந்த உடல். அருகில் மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதில் இன்னொரு உடல் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நினத்து அதை தோண்ட சொன்னோம்.

எங்கள் வீரர் தோண்டினார். அதில் உடல், புதைக்கப்பட்டிருந்தது. அதற்குள் கடற்கரைக்குத் திரும்பிய பழங்குடியினர், எங்களை தாக்கத் தொடங் கினர். உடனடியாக நாங்கள் ஒரு உடலுடன் திரும்பிவிட்டோம். அந்த உடலை அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம்.

பிறகு மற்ற உடலை எடுக்க சென்றோம். முதலில் நாங்கள் செய்த ட்ரிக்கை பூர்வகுடிகள் தெரிந்து கொண்டார்கள். இதனால் அவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்தார்கள். ஒரு பகுதியினர் எங்கள் ஹெலிகாப்டரை நோக்கி ஓடி வந்தனர். மற்றொரு பிரிவினர், படகில் உட்கார்ந்து கொண்டனர். இதனால் எங்களால் ஹெலிகாப்டரை கீழே இறக்க முடியவில்லை. எங்கள் கையில் மெஷின் கன் இருந்தது. இருந்தாலும் திரும்பி விட்டோம். அவர்கள் அபாயக ரமானவர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com