ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் - போலீஸ் குவிப்பு

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் - போலீஸ் குவிப்பு
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் - போலீஸ் குவிப்பு
Published on

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தினர். முகமூடிகளை அணிந்து வந்த மர்ம நபர்கள் தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக, அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்சி கோஷ் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலின் போது மாணவர்கள் பதற்றத்தில் திசை அறியாமல் சீதறி ஓடினர்.

இதுகுறித்து கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. பல மாணவர்கள் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர். அதில் சில மாணவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. அங்கே அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே மாணவர்கள் கும்பலகாக குவிந்துள்ளதாகவும், வெளியே பொதுமக்கள் அதிகமாக குவிந்துள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். இதனிடையே மர்ம நபர்கள் தாக்குதலை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லி காவல்துறை தலைமையகத்திற்கு வெளியேகூடி போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com