நாடு முழுவதும் அண்மையில் வெங்காயத்தின் விலை உயர்வு பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதனையடுத்து மத்திய அரசும் மாநில அரசுகளும் மேற்கொண்ட முயற்சியினால் வெங்காய விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டது.
வடமாநிலங்களில் நிலவிய கடும் மழையினால், வெங்காயத்தின் விலை ஏற்றம் காணப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளது. டெல்லியில் தக்காளி ஒரு கிலோ 80 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதுபோல் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.