தாமஸ் ஆபிரகாம் மற்றும் அவரது 88 வயதான மனைவி மரியம்மா ஆகிய இருவரும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டனர். அதனை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த மாதம் இத்தாலியிலிருந்து திரும்பிய இவர்களது மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் வழியே இந்தக் கொடிய வைரஸ் இவர்களுக்கும் பரவியது. அதனை எதிர்த்து சில வாரங்களாக மரணப் படுகையில் வாழ்வா? சாவா? என இந்தத் தம்பதி போராடி வந்தது. இந்த முதிய வயதிலும் மனம் தளராமல் இருந்து, அந்த நோயிலிருந்து இருவரும் கடந்த வாரம் முழுமையாகக் குணமடைந்து மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.