“கொரோனா அச்சத்தால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவ மறுப்பு”: ஆஸ்துமா நோயாளி பரிதாப உயிரிழப்பு

“கொரோனா அச்சத்தால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவ மறுப்பு”: ஆஸ்துமா நோயாளி பரிதாப உயிரிழப்பு
“கொரோனா அச்சத்தால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவ மறுப்பு”: ஆஸ்துமா நோயாளி பரிதாப உயிரிழப்பு
Published on

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை எனக்கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மறுத்ததால், ஆஸ்துமா நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புகளும் , உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் அனைவருக்கும் போதிய மருத்துவ வசதிகள் வழங்குவதில் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானாவில் ஆஸ்துமா நோயாளி ஒருவர் ஆம்புலன்ஸை அழைத்தபோது அவருக்கு கொரோனா இருக்கும் என அஞ்சிய ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதை காரணம் காட்டி அழைத்துச் செல்ல மறுத்துள்ளனர். இதனால் சாலையோரத்தில் அந்த 52 வயதான நபர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மேடக் மாவட்டம் செகுண்டாவில் புதன்கிழமை மாலை இச்சம்பவம் நடைபெற்றது. அந்த நபர் காமரெட்டி மாவட்டத்திலிருந்து ஹைதராபாத்திற்கு ஒரு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு செல்ல கீழே இறங்கியுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஆனால் திடீரென அவர் சாலையோரத்தில் சரிந்து விழுந்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு ஆம்புலன்சை அழைத்தனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் அந்த நோயாளிக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக அஞ்சிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களிடம் பிபிஇ என்ப்படும் கொரோனா பாதுப்பு உபகரணங்கள் இல்லை என்று கூறி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டனர்.

உடனே போலீஸ் அடுத்த ஆம்புலன்ஸை அழைத்தனர். அந்த ஆம்புலன்ஸ் 45 நிமிடங்கள் கழித்து அங்கு வந்தது. ஆனால் அதற்குள் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை ஹைதராபாத்திற்கு மாற்ற காவல்துறை மற்றொரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்தது. இது ஒரு இயற்கை மரணம் என்பதால் உறவினர்கள் போலீசில் எந்த புகாரும் பதிவு செய்யவில்லை.” எனத் தெரிவித்தனர். அந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்று கேட்டபோது, போலீஸ் அதிகாரி எந்த தெளிவும் இல்லை என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com