காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துகள் பறிமுதல்

காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவின் (Gurpatwant Singh Pannu) சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை பறிமுதல் செய்துள்ளது.
குர்பத்வந்த் சிங் பன்னு
குர்பத்வந்த் சிங் பன்னுpt web
Published on

சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான அறிவிக்கை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பன்னுவின் வீட்டிலும் விவசாய நிலங்களின் முன்பும் ஒட்டப்பட்டுள்ளது. சீக் ஃபார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் குர்பத்வந்த் சிங் பன்னு, காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இவரை மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்து தேடி வருகிறது. பன்னு நடத்தி வரும் சீக் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது கனடாவில் உள்ள குர்பத்வந்த் பன்னு, அங்குள்ள இந்துக்களை இந்தியா திரும்புமாறு மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் பன்னுவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தேசிய புலனாய்வு முகமை தீவிரப்படுத்தியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொலை செய்யப்பட்ட விவகாரம் இரு நாடுகளிடையே மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் என்ஐஏவின் நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com