அசாமில் வெள்ளத்தில் 68 பேர் உயிரிழப்பு : 48 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாமில் வெள்ளத்தில் 68 பேர் உயிரிழப்பு : 48 லட்சம் மக்கள் பாதிப்பு
அசாமில் வெள்ளத்தில் 68 பேர் உயிரிழப்பு : 48 லட்சம் மக்கள் பாதிப்பு
Published on

அசாம் வெள்ளத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் மிக கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 30 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 48 லட்சம் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சிரமத்தை சந்தித்துள்ளனர். 4,500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. வெள்ளத்தால் இதுவரை 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமாஜி, லகிம்பூர், பிஸ்வநாத், சொனித்பூர், சிராங், முஜுலி, தின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்கள் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன. இப்பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் முழு வீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகங்களின் ஏற்பாட்டின்படி இதுவரை 487 வெள்ள மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 30 மாவட்டங்களில் இருந்து இதுவரை 1.25 லட்சம் மக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் 66க்கும் மேற்பட்ட விலங்குகள் வெள்ளத்தால் இறந்துள்ளன. 170 வனவிலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் உத்தரவிட்டுள்ளார். வெள்ள மீட்புப் பணிகளை விரைவுப்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் சாலைகள், பாலங்கள், மரங்கள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com