”மாதந்தோறும் ரூ.6 லட்சம் ஜீவனாம்சம் கேட்பதா?” - விவாகரத்தான பெண்ணை கண்டித்த கர்நாடக உயர் நீதிமன்றம்

மனைவி ஆடம்பரமாக வாழ விரும்பினால், அவர் உழைத்து சம்பாதிக்க வேண்டும். முன்னாள் கணவரிடம் மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்பது சரியல்ல என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
Karnataka High court
Karnataka High courtpt desk
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம், பெங்களுாரில் வசித்தவர்கள் நரசிம்மா - ராதா முனு குண்ட்லா தம்பதியர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து விவாகரத்து வழங்கிய குடும்ப நல நீதிமன்றம், ராதாவுக்கு மாதம், 50,000 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்கும்படி அவரது கணவருக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த தொகை போதாது எனவும், மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் எனவும் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராதா வழக்கு தொடர்ந்தார்.

Court order
Court orderpt desk

இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான ராதா தரப்பு வழக்கறிஞர், என் கட்சிக்காரரின் முழங்கால் வலிக்கு பிசியோதெரபி சிகிச்சை பெறவும், மருந்துகள் வாங்கவும் மாதந்தோறும் 4 முதல் 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதேபோல் வளையல், பிராண்டட் உடைகள், செருப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்கு 50,000 ரூபாயும் ஊட்டச்சத்தான உணவுக்கு 60,000 ரூபாயும் தேவைப்படுகிறது. எனவே, மாதந்தோறும் 6,616,300 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

Karnataka High court
கர்நாடகா | தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

இதைக் கேட்ட நீதிபதி லலிதா கன்னகாந்தி பிறப்பித்த உத்தரவில், இந்த வாதம் எனக்கு ஆச்சரியமளிக்கிறது. மாதந்தோறும் தனிநபர் செலவுக்கு 6,16,300 ரூபாய் வேண்டுமா? யாராவது இவ்வளவு ரூபாய் செலவிடுவரா? உங்கள் கட்சிக்காரருக்கு ஆடம்பரமாக செலவிட்டே ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால், அவரே பணம் சம்பாதிக்கட்டும். முன்னாள் கணவரிடம் கேட்கக் கூடாது.

Karnataka High court
"கவுண்ட் டவுன் ஆரம்பம்"|சர்ச்சைக்குரிய கருத்தை முகநூலில் பதிவிட்டதாக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் கைது

மனைவிக்கு குடும்பப் பொறுப்பும் இல்லை. தன் சொந்த செலவுக்கு இவ்வளவு பணம் கேட்கிறார். உண்மையில் இது அர்த்தமற்ற வாதம். ஜீவனாம்சம் என்பது, எந்த காரணத்துக்காகவும் தண்டனையாக மாறிவிடக் கூடாது. ராதா மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com