ரம்ஜான் காலத்தில் காஸா மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் என சிறப்பு தூதர் மூலம் இஸ்ரேலிய அரசை, தாம் கேட்டுக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில், ரம்ஜான் பண்டிகையின்போது காஸா மீதான வான்வழித் தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தி, இந்தியா சார்பில் சிறப்புத் தூதரை இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்தேன்.
புனித மாதத்தில் போரில் ஈடுபடுவதைவிட அமைதியை நிலைநாட்டுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வலியுறுத்தப்பட்டது. அவர்கள் அதைப் பின்பற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் இறுதியில், 2-3 நாட்கள் சண்டை நடந்தது. மேலும், போரைத் தடுக்க வேறு சில நாடுகளும் இஸ்ரேலுடன் பேச முயற்சித்தன. இதனால், ரம்ஜான் காலத்தில் காஸா மீது குண்டுவீசுவதை இஸ்ரேல் தவிர்த்தது. இதை நான் விளம்பரத்திற்காக வெளியில் சொல்லவில்லை. முஸ்லிம்கள் விவகாரத்தில் தாம் விமர்சிக்கப்பட்டாலும், இதை நான் விளம்பரத்திற்காக வெளியில் சொல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.