தந்தம் மட்டுமல்ல, தோலுக்காகவும் கொல்லப்படும் யானைகள்!

தந்தம் மட்டுமல்ல, தோலுக்காகவும் கொல்லப்படும் யானைகள்!
தந்தம் மட்டுமல்ல, தோலுக்காகவும் கொல்லப்படும் யானைகள்!
Published on

ஆசிய யானைகளை தந்தத்திற்காக மட்டும் அல்லாமல் தோலுக்காகவும் கொல்லப்படுவது அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து தொண்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 

ஆசிய யானைகள் வேட்டையாடப்பட்டு, கொல்லப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கள்ளச்சந்தையில் யானைகளின் தந்தந்தங்கள் அதிகமான விற்பனையாவதே இதற்கு காரணமாகும். யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க அனைத்து ஆசிய நாடுகளும் கடுமையான சட்டங்களை பின்பற்றி வருகின்றன. இருப்பினும் யானைகள் கொல்லப்படும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் ஆசிய யானைகள் கொல்லப்படுவது குறித்து இங்கிலாந்து தொண்டு அமைப்பு ஒன்று 4 ஆண்டுகள் ஆய்வு நடத்தி, உண்மையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் படி தந்தத்திற்காக மட்டுமின்றி தோலுக்காகவும் யானைகள் கொல்லப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. யானைத்தோல்களை கொண்டு மருந்துகள் செய்வதுடன், அணிகலன்களும் செய்யப்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. யானைகள் கொல்லப்படுவது தடுக்கப்படாவிட்டால் அவற்றின் வாழிடங்கள் பாதியாக குறையும் அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com