புரி ஜெகன்நாதர் கோவிலின் நிலவரையில் உள்ள பொக்கிஷ அறையில், மன்னர் காலத்தில் காணிக்கையாக கொடுக்கப்பட்ட ஏராளமான தங்கம், வைர, வைடூரிய நகைகள் போன்ற மதிப்பு மிக்க பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறது. சில நூறு ஆண்டுகள் பழமையான இந்த அறையானது பழுதடைந்த நிலையில் அதை கோயில் நிர்வாகம் சரிசெய்ய திட்டமிட்டுள்ளது.
நிர்வாகத்தினர் அழைப்பின் பேரில் வந்த 17 பேர் கொண்ட விஞ்ஞானிகள், தொல்லியல் துறையினர் அடங்கிய குழு லேசர் சோதனை உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும் பொக்கிஷ அறை சுவர்களின் உறுதித்தன்மையும், நவீன கருவிகள் மூலம் அடுத்து வரும் நாட்களில் சோதிக்கப்பட உள்ளது.
முன்னதாக பொக்கிஷ அறை 46 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது, மக்களவை தேர்தல் நேரத்தில் பெரும் சர்ச்சையானது. புதிய அரசு அமைந்த பின்னர் அந்த அறை கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது. உள்ளிருந்த நகைகள் கணக்கெடுக்கப்பட்ட நிலையில் பழுதுபார்க்கும் பணிக்காக அவை பாதுகாப்பாக கோயிலுக்குள் உள்ள வேறு ஒரு அறைக்கு மாற்றப்பட்டுள்ளது.