கோட்டக் வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரி.. யார் இந்த அசோக் வஷ்வாணி..?

கண்டங்களைத் தாண்டி வங்கித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் இந்தியர் ஒருவரை இந்தியாவில் முன்னணி வரிசையில் உள்ள தனியார் வங்கி ஒன்று தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்துள்ளது. அது எந்த வங்கி? யார் அந்த அதிகாரி? விரிவாக பார்க்கலாம்.

30 ஆண்டுகளாக தொழில்துறையில் தலைமை பதவிகளை வகித்து வரும் அசோக் வஷ்வானியைத்தான் கோட்டக் வங்கி, தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமித்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக கோட்டக் வங்கியின் நிறுவனரும் இயக்குநருமான உதய் கோட்டக் தெரிவித்துள்ளார்.

Ashok Vaswani
Ashok Vaswani

பகாயா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவராகவும், லண்டன் பங்குச்சந்தை குழுமத்திலும் பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த அசோக் வஷ்வானி, பிரிட்டன் பார்க்லேஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், சிட்டிபேங்க்கின் ஆசியா பசிபிக் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியவர். 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பார்க்லேஸ் வங்கியில் பணியாற்றியபோது, அவ்வங்கியை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் கொண்டுவந்ததில் அசோக் வஷ்வானிக்கு பெரும் பங்கு உண்டு. பிரிட்டன் வங்கியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

Ashok Vaswani
Ashok Vaswani

சர்வதேச அளவில் இந்தியாவின் எதிர்கால வங்கித்துறையை அசோக் வஷ்வானி உருவாக்குவார் என உதய் கோட்டக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல, கோட்டக் மஹிந்திரா வங்கியை அதன் தற்போதைய நிலைக்குக் கட்டியமைத்த பெருமைக்குரிய உதய் கோட்டக்கின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெருமை அடைவதாக அசோக் வஷ்வானி தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com