வெங்காயம் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரபி பருவத்தில் வெங்காயம் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் விலை குறைந்து வருகிறது. வரும் மார்ச் மாதத்தில் 40 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு வெங்காயம் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் 28 லட்சம் டன் வெங்காயம் மட்டுமே உற்பத்தியாகியிருந்தது.
எனவே விவசாயிகளின் நலன் கருதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் ஒப்புதல் அளித்த பிறகே வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்ததால் விலையைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.