நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி ருபாய் அளவிலான உணவு பொருட்கள் வீணாவதாகவும், இதனை தடுத்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருதாக தஞ்சை உணவு பதப்படுத்தும் தொழில் நுட்ப கழக இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தஞ்சை இந்திய உணவு பதன தொழிற்நுட்ப கழகத்தில் பொன்விழா ஆண்டு கருத்தரங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பதப்படுத்தும்துறை இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் இந்த ஆண்டு உணவு பதப்படுத்தும் துறையின் வளர்ச்சி 8 முதல் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இதற்காக மத்திய அரசு இந்த ஆண்டு 1400 கோடி ருபாய் இந்த துறைக்கு மட்டும் ஒதுக்கி உள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு பதப்படுத்தும் தொழில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்
மேலும் கூறிய அவர், இதன் மூலம் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவருக்கும் லாபம் கிடைப்பதாகவும், போதிய பதப்படுத்தும் முறை இல்லாததால் நாட்டில் ஆண்டு ஒன்றிக்கு சுமார் 1 லட்சம் கோடி ருபாய் அளவிலான உணவு பொருட்கள் வீணாவதாகவும் தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு வசதிகள், போதிய வசதியுடன் கூடிய போக்குவரத்து வசதி இல்லாததே இதற்கு காரணம் என்றும், இதனை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் பதப்படுத்தும் தொழில் மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து பன்னாட்டு கருத்ததரங்கம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் உரிய உணவு இல்லாமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. ஆனால் போக்குவரத்து வசதி இல்லாமல், போதிய சேமிப்பு வசதி இல்லாமல் இவ்வளவு உணவு தானியங்கள் வீணாகிறது.