"கேபிள் பாலம் விபத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது!" - கெஜ்ரிவால்

"கேபிள் பாலம் விபத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது!" - கெஜ்ரிவால்
"கேபிள் பாலம் விபத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது!" - கெஜ்ரிவால்
Published on

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் மீது சுகேஷ் சந்திரசேகர் வைத்துள்ள குற்றச்சாட்டு மக்களை திசை திருப்பும் முயற்சி என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதில் கூறியுள்ளார்.

இரட்டை இலை லஞ்ச வழக்கு, தொழிலதிபர் மனைவியிடம் ரூபாய் 200 கோடி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தவாறு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

'தேர்தலில் போட்டியிட தமக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறியதால் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.50 கோடி கொடுத்ததாகவும், அதேபோன்று சிறையில் சத்தியேந்திர ஜெயின் தம்மை பலமுறை சந்தித்து பேசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிறையில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் மாதம் ரூ.2 கோடி தர வேண்டுமென சத்யேந்திர ஜெயின் மிரட்டியதாகவும் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர் குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ’’தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அதை நான் விடமாட்டேன். முன்னதாக, டெல்லி துணைநிலை ஆளுநர் இன்னும் அனுமதி வழங்காததால் செவ்வாய்க்கிழமை முதல் இலவச யோகா திட்டம் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்திருந்தனர்.

யோகா வகுப்புகள் எடுப்பதற்கு, ஆசிரியர்கள், பணம் கூட கேட்க மாட்டோம், வகுப்புகள் எடுக்க தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளனர். ஆனால் அற்ப அரசியலுக்காக யோகா வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக பாஜக உள்ளது. குஜராத் பாலம் விபத்துக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும். போர்பி பாலம் இடிந்தது பெரும் ஊழலின் விளைவு’
என்றார்.

இதனை தொடர்ந்து, ‘ சத்யேந்திர ஜெயின் மீதான சுகேஷ் சந்திரசேகர் வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், ‘குஜராத்தில் தற்போது பாஜக மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் சுகேஷ் சந்திரசேகரின் ஆதரவு தேவை, சத் பூஜை கொண்டாட்டத்தில் கேபிள் பாலம் விபத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி தான் இது’ என பதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com