அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அபராதம்

அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அபராதம்
அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அபராதம்
Published on

அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் பதில் அளிக்க தாமதித்ததால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அ‌ரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரின் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடந்தது. அதற்கு அருண் ஜேட்லிதான் காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் டெல்லி கிரிக்கெட் சங்கம் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் அதில், அதன் தலைவராக பதவி வகித்த அருண் ஜேட்லிக்கு தொடர்பிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அருண் ஜேட்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். ‌இதில் உரிய காலத்தில் பதில் அளிக்கவில்லை என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை அடுத்தும் கெஜ்ரிவால் பதில் அளிக்காததால் தற்போது மீண்டும் அவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com